×

வாணியம்பாடி அருகே விடிய விடிய கனமழை புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல், வாணியம்பாடியில் பெய்து வந்த மழை காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணை 3 நாட்களுக்கு முன்பு முழுமையாக நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு மழை கொட்டி தீர்த்ததால், 12 அடி உயர தடுப்பணையில் இருந்து பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதேபோல் திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அலசந்தாபுரம், ராமநாயக்கன்பேட்டை, கொடையாஞ்சி ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் சிறுசிறு கால்வாய்களிலும் நீர் நிரம்பி அங்குள்ள மண்ணாற்றில் பாலத்தை கடந்து வெள்ளம் பாய்கிறது. இதையடுத்து, புல்லூர் பாலாறு மற்றும் மண்ணாற்றை பார்க்க வந்த மக்கள் மலர்கள் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த அம்பலூர் கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த விளை நிலங்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டார். அப்போது 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, அங்கிருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும்மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூர் உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வெள்ளக்காடான விளை நிலங்கள்புல்லூர் பாலாறு மற்றும் திம்மாம்பேட்டை மண்ணாறு ஒட்டிய பகுதிகளில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது. இவற்றில் வாழை, வேர்க்கடலை, பருத்தி, பப்பாளி, கொய்யா, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. மேம்பாலம் ஒட்டியபடி வெள்ளம் பாய்வதால் அருகில் உள்ள பல ஏக்கர் விளை நிலங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பயிர்கள் மூழ்கி விளை நிலங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது….

The post வாணியம்பாடி அருகே விடிய விடிய கனமழை புல்லூர் தடுப்பணை நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Baladi ,Bullur ,VANIYAMBARI ,Tamil Nadu Andhra border ,Tirupattur district ,Vainiyambadi ,Vanyambadi ,Pullur ,
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...