ரஜினி, விஜய், ஆமிர்கான் வீடுகளில் தேசியக் கொடி

சென்னை: ரஜினிகாந்த், விஜய், ஆமிர்கான் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகளில் தேசியக் கொடி வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால் உள்பட பல நடிகர்கள் தங்களது டிவிட்டர் டிபியில் தேசியக் கொடியை வைத்தனர். இந்நிலையில் 75வது சுதந்திர தினம் என்பதால் பலரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை வைக்க முடிவு செய்து, வைத்தும் வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், விஜய், ஆமிர்கான், மம்மூட்டி, மோகன்லால் உள்பட பல நடிகர், நடிகைகள் தங்களது வீடுகளுக்கு வௌியே பொதுமக்களுக்கு தெரியும்படி தேசியக் கொடியை வைத்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், ‘நமது முன்னோர்கள் கஷ்டப்பட்டு, போராடி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் இது. கட்சி, ஜாதி, மதம், அரசியல் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், நாம் நமது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: