மும்பையில் ரூ.8 கோடியில் வீடு வாங்கினார் ராஷ்மிகா

சென்னை: மும்பையில் ரூ.8 கோடியில் வீடு வாங்கியுள்ளார் ராஷ்மிகா. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ராஷ்மிகா, சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்தார். இப்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு, வெப்சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்தியில் மேலும் 2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால் மும்பையில் வாடகை வீட்டில் குடியிருந்த ராஷ்மிகா, அந்தேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்து வந்தார்.

இந்நிலையில் ரூ.8 கோடியில் ஒரு வீட்டை அவர் வாங்கியிருக்கிறார். மூன்று அறைகள் கொண்ட இந்த வீட்டில் தனது அம்மாவுடன் ராஷ்மிகா தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவை காதலித்து வந்ததால், ஐதராபாத்தில் அதிக நாட்கள் கழிக்க அங்கு லீசுக்கு வீடு எடுத்திருந்தார். ஐதராபாத்திலேயே சொந்த வீடு வாங்கவும் ராஷ்மிகா திட்டமிட்டார். ஆனால் திடீரென விஜய் தேவரகொண்டாவுடன் காதல் முறிந்தது. இதனால் ஐதராபாத்தில் வீடு வாங்கும் திட்டத்தை அவர் கைவிட்டார். தற்போது பாலிவுட்டில் கோலோச்ச ராஷ்மிகா முடிவு செய்திருப்பதால் அங்கேயே வீடு வாங்கியுள்ளார். சொந்த மாநிலமான கர்நாடகாவிலும் ராஷ்மிகாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது.

Related Stories: