×

கீழ்முதலம்பேடு, ஏ.என்.குப்பம் பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்: எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கீழ்முதலம்பேடு, ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் ஊராட்சிகளில் மின்அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதனை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், மின்செயற்பொறியாளர் உதயகுமார். உதவி செயற்பொறியாளர் சற்குணம், கவரப்பேட்டை உதவிப்பொறியாளர் சரவணன் ஆகியோருக்கு உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி கடந்த இருதினங்களில் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டது. அதை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன், மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்தார். கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, ஏ.என்.குப்பம், ஊராட்சி தலைவர் அம்மு விநாயகம், ஊராட்சி செயலாளர்கள் சாமுவேல், தங்கதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post கீழ்முதலம்பேடு, ஏ.என்.குப்பம் பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கம்: எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Movement ,Kilimulampedu ,MLA ,DJ Govindarajan ,Kummidipoondi ,Panchayats ,A.N.Kuppam. ,TJ Govindarajan ,Dinakaran ,
× RELATED தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கலாம்