படப்பிடிப்பு: ஷில்பா ஷெட்டி, விஷால் காயம்

சென்னை: படப்பிடிப்புகளில் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் விஷால் காயம் அடைந்தனர். பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப்சீரிஸ், இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். மும்பையில் நேற்று அதிகாலை படப்பிடிப்பு நடந்தது. இதில் ஷில்பா ஷெட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனால் மாபியா கும்பல் ஒன்றை ஷில்பா பிடிப்பதுபோன்ற ஆக்‌ஷன் காட்சியை ரோஹித் ஷெட்டி படமாக்கி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்த ஷில்பாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது இடது கால் எலும்பு முறிந்தது பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து ஷில்பா ஓய்வு எடுத்து வருகிறார்.

விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியை படமாக்கி வந்தனர். இதில் விஷால் பங்கேற்று நடித்து வந்தார். அப்போது திடீரென அவரது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறினார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Related Stories: