ஸ்கின் அலர்ஜி: நயன்தாரா திடீர் அட்மிட்?

சென்னை: நடிகை நயன்தாரா திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக தகவல் பரவியது. நயன்தாரா, இயக்குனர் விக்‌னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் தேனிலவுக்கு சென்று வந்தனர். தற்போது படப்பிடிப்புகளில் பங்கேற்று நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நயன்தாராவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து வாந்தி எடுத்தபடி இருந்ததாகவும், அவரது தோலில் அரிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தகவல் பரவியது. மீன் சாப்பிட்டதால் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டதாகவும் தோல் அலர்ஜி உண்டாகி, அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஒருநாள் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.  தற்போது படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே அவர் ஓய்வு எடுத்து வருகிறார். அதே சமயம் இந்த தகவலை நயன்தாரா தரப்பு உறுதி செய்யவில்லை.

Related Stories: