×

சீனிவாசன் உடல் நிலை மோகன்லால் கண்ணீர்

திருவனந்தபுரம்: மலையாள நடிகரும் இயக்குனருமான சீனிவாசனின் உடல் நிலையை பார்த்து மோகன்லால் கண்ணீர் வடித்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து, கதைகள் எழுதி, இயக்கியவர் சீனிவாசன். இவர் ஒரு படத்துக்கு கதை எழுதினால், அந்த படம் ஹிட்டாகும் என்பது மலையாள சினிமாவில் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அந்த அளவுக்கு ரசிகர்களின் ரசனையை அறிந்தவர் சீனிவாசன். இப்போது இவரது மகன்கள் வினீத் சீனிவாசன், தயன் சீனிவாசன் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் உள்ளனர். சீனிவாசனுக்கு கடந்த சில மாதமாக உடல் நிலை சரியில்லை. சமீபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் திரையுலக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீனிவாசன் கலந்துகொண்டார். உடல் மெலிந்து, முகம் பொலிவிழந்து, பார்ப்பதற்கு பரிதாப நிலையில் இருந்தார். மேடையில் அவரை பார்த்த மோகன்லால் கண்ணீர் வடித்தார். இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். சீனிவாசனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு, தனது அன்பை மோகன்லால் வெளிப்படுத்தினார். ‘சீனிவாசன் எப்போதும் தாகத்துடன் இருக்கும் ஒரு கலைஞன். இப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். ஆனாலும் திரைக்கலைஞனாக அவர் கண்டிப்பாக மீண்டு வருவார்’ என மோகன்லால் கூறினார்.

Tags : Srinivasan ,Mohanlal ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...