அமீர் இயக்கத்தில் நடிக்க மறுப்பா? கார்த்தி பதில்

சென்னை: முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி ஷங்கர் நடித்த படம், ‘விருமன்’. சூர்யா, ேஜாதிகா, ராஜசேகர் பாண்டியன் தயாரித்துள்ளனர். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கார்த்தி கூறியதாவது: அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’, முத்தையா இயக்கிய ‘கொம்பன்’ உள்பட இதற்கு முன்பு நான் நடித்த எந்தப் படத்தின் சாயலும் ‘விருமன்’ படத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் ெசலுத்தினேன். நிஜ வாழ்க்கையில் என் தந்தை சிவகுமார் எனக்கு இன்ஸ்பிரேஷன். இப்படத்தில் எனது தந்தை பிரகாஷ்ராஜ் எனக்குப் பெரிய வில்லன். தொடர்ந்து நகரத்து இளைஞனாகவே நடித்ததால், ஏதாவது வித்தியாசம் வேண்டும் என்று கிராமத்து இளைஞனாக நடித்துள்ளேன்.

எனது அண்ணன் சூர்யா, அண்ணி ஜோதிகா தயாரித்த படம் என்றாலும், சினிமாவில் என் மார்க்கெட்டுக்கு என்ன சம்பளமோ அதை கறாராக வாங்கி நடித்துள்ளேன். இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடனம் ஆடுவார், நடிப்பார், பாடுவார். அவர் டாக்டருக்குப் படித்தவர். இயக்குனர் அமீருக்கும், எனக்கும் பிரச்னை இல்லை. ‘பருத்திவீரன்’ கூட்டணி மீண்டும் இணைவது எப்போது என்கிறார்கள். ‘எதையும் நாம் தீர்மானிக்க முடியாது. காலம்தான் தீர்மானிக்கும். அதுவரை பொறுமையாக நம் வேலையை செய்ய வேண்டும்’ என்று என் தந்தை சொல்வார். இதுதான் எனது பதில். மணி ரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல் வன்’ படத்தில் நடித்துள்ளேன். பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்றுள்ளேன். அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கஇருக்கிறேன்.

Related Stories: