ஆமிர்கான் படத்துக்கு விளம்பரம் பண்ணாதீங்க: நெட்டிசன்கள் மீது கங்கனா கொதிப்பு

மும்பை: ஆமிர்கான் படத்துக்கு விளம்பரம் பண்ணாதீங்க என நெட்டிசன்களை கடிந்துகொண்டிருக்கிறார் கங்கனா ரனவத். ஆமிர்கான், கரீனா கபூர் நடித்துள்ள படம் லால் சிங் சட்டா. வரும் 11ம் தேதி ரிலீசாகிறது. கடந்த 2019ல், ‘நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. இந்த நாட்டை விட்டு வெளியேற நினைத்தேன்’ என ஆமிர்கான் கூறியிருந்தார். இதனால் அவர் நடித்திருக்கும் லால் சிங் சட்டா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.

இதுபற்றி கங்கனா ரனவத் இன்ஸ்டாகிராமில் கூறியது: வரவிருக்கும் படமான லால் சிங் சட்டாவைச் சுற்றியுள்ள அனைத்து எதிர்மறைகளும் ஆமிர்கானால் திறமையாக கையாளப்பட்டதாக நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு எந்த இந்தி படங்களும் ஓடவில்லை. தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமே இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அல்லது உள்ளூர் சுவையுடன் நல்ல படைப்பு கொடுத்திருக்கிறார்கள் எனலாம். லால் சிங் சட்டா ஹாலிவுட் ரீமேக் படமாம். இந்தியாவை சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று அழைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வெளிநாட்டின் படைப்புகளைதான் மதிப்பார்கள். ஆமிர்கான், இந்துபோபிக் ‘பிகே’வை உருவாக்கிய பிறகும் அல்லது இந்தியாவை சகிப்புத்தன்மையற்றவர் என்று அழைத்த பிறகும் அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். அதனால் அவரது படத்தை புறக்கணிக்க சொல்லி, மேலும் விளம்பரம் செய்யாதீர்கள். இவ்வாறு கங்கனா கோபமாக கூறியிருக்கிறார்.

Related Stories: