கேரள திரைப்பட விருது நிகழ்ச்சி தள்ளிவைப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசின் 52வது திரைப்பட விருதுகள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டன. சிறந்த படமாக ‘அவசவியூகம்’ தேர்வானது. சிறந்த நடிகர் விருது பிஜூ மேனனுக்கும் (ஆர்க்கரியாம்), ஜோஜூ ஜார்ஜுக்கும் (மதுரம், பிரீடம் பைட், துறமுகம், நயாட்டு) பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகையாக ரேவதி (பூதகாலம்), சிறந்த இயக்குனராக திலீஷ் போத்தன் (ஜோஜி), சிறந்த பொழுதுபோக்குப் படமாக ‘ஹிருதயம்’ உள்பட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விழா ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: