ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகிறார் ஜான்வி கபூர்

ஐதராபாத்: ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் ஜூனியர் என்டிஆர். அவர் நடிக்க உள்ள புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்க உள்ளார். இதில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்க அலியா பட் தேர்வாகியிருந்தார். திடீரென ரன்பீர் கபூருடன் திருமணம் முடிந்ததும் இப்போது கர்ப்பமாக அவர் இருப்பதும் படத்துக்கு தடையாக அமைந்துவிட்டது. இதனால் அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இது பான் இந்தியா படம் என்பதால், பாலிவுட் நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என கொரட்டாலா சிவாவும் படத்தின் தயாரிப்பாளரும் விரும்பினர்.

இதையடுத்து சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சம்பளம் விஷயம் காரணமாக, யாரும் தேர்வு செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் இப்போது ஜான்வி கபூரிடம் பேச்சு நடந்து வருகிறது. இது பற்றி ஜான்வி கபூர் கூறும்போது, ‘ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு லெஜன்ட். அவருடன் நடிக்க நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இப்போதைக்கு இதில் நடிப்பதை நான் உறுதியாக சொல்ல முடியாது’ என்றார். இன்னும் ஒப்பந்தம் போடப்படாததால் ஜான்வி இந்த படத்தில் நடிப்பதை கூற மறுப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.