×

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதல் முறிவு

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையிலான காதல் உறவு முறிந்துவிட்டதாக டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. 2018ல் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ஜோடியாக நடித்தனர். இதில் இவர்கள் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2019ல் டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இவர்கள் காதலிப்பதாக கிசு கிசு பரவியது. அந்த தகவல் நிஜம்தான் என கூறும் வகையில் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்தனர்.

ஆனாலும் மீடியா வெளிச்சம் படாதபடி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் லைகர் படம் மூலம் பான் இந்தியா படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் தற்போது பாலிவுட்டில் கிடைத்த புதிய நட்பின் காரணமா, சில நடிகைகளுடன் விஜய் தேவரகொண்டா நட்பாக பழகி வருகிறாராம். அவரது இந்த போக்கு, ராஷ்மிகாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக அவர்களுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

Tags : Vijay Devarandha ,Rashmika ,
× RELATED குபேராவில் வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ்