×

நரிகுறவர்களுக்கு நிவாரண உதவி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் மற்றும் வசுவசமுத்திரம் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இருளர், நரிக்குறவர் என 200 குடும்பத்தினருக்கு கொரோனா ஊரடங்கு நிவாரணமாக அரிசி, காய்கறி உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா புதுப்பட்டினத்தில் நடந்தது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு தலைவர் எம்.காதர்உசேன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். விழாவில், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் எம்.தினேஷ்குமார், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் காதர்பாஷா, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாதிக்பாஷா, நிர்வாகிகள் தங்கமணி, ஷேக்ஆதம், செல்லபெருமாள், வசந்த், ஜாகிர்உசேன், அன்சர்பாஷா, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நரிகுறவர்களுக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Thirukkalukukunram Union ,Pudupattinam ,Vasuvasamutram ,
× RELATED செருப்பால் ஏன் பாயை மிதித்தாய் என...