×

தனியார் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.12,875 கோடிக்காக பாரீஸில் இந்திய சொத்துகள் பறிமுதல்: பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இங்கிலாந்தை சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள தனது கிளை நிறுவனமான கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியது. பங்குகளை மாற்றிய வகையில் கெய்ர்ன் இந்தியா முதலீட்டு ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி வருமான வரித்துறை அந்நிறுவனத்துக்கு ரூ.10,247 கோடி வரி விதித்தது. ஆனால், இந்த வரியை செலுத்த கெய்ர்ன் நிறுவனம் மறுத்து விட்டது. உள்நாட்டில் நடந்த வழக்குகளில் தோல்வி அடைந்ததால், கெய்ர்ன் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு முடக்கியது. இதை எதிர்த்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் கெய்ர்ன் நிறுவனத்திற்கு வட்டி, அபராதத்துடன் சேர்த்து ரூ.12,875 கோடி வழங்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இத்தொகையை செலுத்த தவறினால், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதாக கெய்ர்ன் நிறுவனம் கூறியது. இந்த தொகையை வசூலிக்க கெய்ர்ன் நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, சிங்கப்பூர், மொரீஷியஸ் நெதர்லாந்து உள்பட வெளிநாடுகளில் இருக்கும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அந்தந்த நாடுகளில் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், இதன் ஒருபகுதியாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான 20 சொத்துக்களை பறிமுதல் செய்ய கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகளாக இருப்பதாகவும் அவற்றில் இந்திய அதிகாரிகள் தங்கியிருப்பதால் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஒன்றிய அரசு மறுப்புபிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி ஒன்றிய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘அது பற்றிய எந்த தகவலும் அரசுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. இதன் உண்மை நிலை பற்றி அரசு விசாரித்து வருகிறது,’ என்று கூறினர்.என் வழி… தனி வழி…கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் இதற்கு முன்பு, பாகிஸ்தான், வெனிசுலா, அர்ஜென்டினா, காங்கோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வழக்கு தொடுத்து அந்நாடுகளின் விமானம், கப்பல் போக்குவரத்து துறைக்கு சொந்தமான விமானங்கள், கப்பல்களை இழப்பீடாக பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை இழப்பீடாக கேட்டது. இதனால், அதனை வாங்க இருக்கும் டாடா நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது….

The post தனியார் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.12,875 கோடிக்காக பாரீஸில் இந்திய சொத்துகள் பறிமுதல்: பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Paris ,New Delhi ,UK ,Cairn Energy ,Cairn India ,Dinakaran ,
× RELATED இனி உற்பத்தி, விநியோகம் இல்லை...