×

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ரூ.80 லட்சம் கேட்டு ஆடிட்டரை காரில் கடத்திய 6 பேர் கைது

சென்னை: வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா (49), ஆடிட்டர். இவர், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (51), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த குமார் (46) உள்ளிட்ட சிலரிடம், மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.80 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் அதன்படி வேலை வாங்கி தரவில்லை. இதனால், கொடுத்த ரூ.80 லட்சத்தை திருப்பி கேட்டபோது, தராமல் அலைக்கழித்துள்ளார்.  இதுதொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எழும்பூர் கென்னட் லேன் சாலையில் உள்ள லாட்ஜிக்கு வருமாறு ஆடிட்டர் ராஜாவை, ராமமூர்த்தி மற்றும் குமார் அழைத்துள்ளனர். அதன்படி அவர் தனது காரில் டிரைவருடன் வந்துள்ளார். அங்கு, ஆடிட்டர் ராஜாவை, ராமமூர்த்தி உட்பட 5 பேர் தங்களது காரில் கடத்தினர். இதை பார்த்த ஆடிட்டரின் டிரைவர், உடனே எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் ஆடிட்டரை கடத்தி சென்ற கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், ஆடிட்டர் ராஜாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரை கடத்தி சென்ற ராமமூர்த்தி மற்றும் குமார் ஆகியோர் காவல் நிலையம் வருவதாக கூறினர். அதன்படி ஆடிட்டர் ராஜாவை கடத்திய ராமமூர்த்தி, குமார் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த சிவபாலன் (43), கடலூர் மாவட்டம் தொண்டூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் (35), பண்ருட்டியை சேர்ந்த கிள்ளிவளவன் (31), விழுப்புரம் மாவட்டம் மலவந்தாங்கல் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (23) ஆகியோர் காவல் நிலையத்தில் ஆடிட்டருடன் சரணடைந்தனர்.பின்னர் ஆடிட்டர் ராஜா அளித்த புகாரின்பேரில், ராமமூர்த்தி, குமார், கிள்ளிவளவன், சுதர்சன், சிவபாலன், அலெக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், வேலை வாங்கி தருவதாக ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் கொடுத்த புகாரின்பேரில், ஆடிட்டர் ராஜாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்….

The post மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ரூ.80 லட்சம் கேட்டு ஆடிட்டரை காரில் கடத்திய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Raja ,Vadapalani Bhajanai Koil Street ,Vettavalam ,Thiruvannamalai district ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர்...