தமிழில் கால் பதிப்பாரா ராம் பொத்தனேனி

தெலுங்கு நடிகரான ராம் பொத்தனேனி வாரியர் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் ராம் பொத்தினேனி போலீஸ் அவதாரத்தில் மிரட்டுகிறார், போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முற்றிலுமாக மாறியிருக்கிறார். அவர் இப்படத்தில் தமிழில் சொந்தமாக டப்பிங் செய்துள்ளார்.

ஆதி பினுஷெட்டி வில்லனாக நடிக்கிறார். விசில் மகாலட்சுமியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார், ஶ்ரீனிவாசா சிட்தூரி   தயாரிக்கிறார்.

"நான் ஆந்திராவை சேர்ந்தவன் என்றாலும் தமிழ்நாட்டில்தான் படித்தேன். 12 வருடங்கள் சென்னையில் வாழ்ந்தேன். தமிழ் சரளமாக பேசுவேன். எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு எனக்கு இன்னொரு வீடு" என்கிறார் ராம் பொத்தனேனி.

Related Stories: