×

ஆந்திர வனப்பகுதியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்!: தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரிப்பு..!!

திருப்பத்தூர்: வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர் மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தமிழக ஆந்திர மாநில எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திர மாநில அரசு கட்டியுள்ள தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதேபோல பாலாற்றில் அம்பலூர் தரைப்பாலம் மூழ்கியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பிம்மம்பேட்டை, நாராயணபுரம் பகுதிகளில் உள்ள கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். …

The post ஆந்திர வனப்பகுதியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்!: தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra forest ,Bala ,Tirupattur ,Vaniyambadi ,Andhra ,Palam ,Vaniyampadi ,Tirupathur district ,Pala ,
× RELATED பதவி தந்தருளும் பால விநாயகர்