8 வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கும் நயன்தாரா

நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் 02. இதனை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார், தமிழ் அழகன் ஒளிப்பதிவு  செய்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படம் டிஷ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம்.

கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி நடித்துள்ளனர்.  என்றார்.

Related Stories: