×

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ராதிகாவுக்கு கவுரவம்

இங்கிலாந்து சென்ற நடிகை ராதிகாவுக்கு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். விருது பெற்ற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகா பேசும்போது...

“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி", என்றார்.

Tags : Radhika ,UK Parliament ,
× RELATED விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக...