×

கடைமடைக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை

சேதுபாவாசத்திரம் : தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளுக்கு அணை திறந்து 25 நாட்களாகியும் முறை வைத்து வழங்கப்படும் தண்ணீரால் ஏரி, குளங்களை நிரம்ப முடியவில்லை. கல்லணையில் முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேட்டூர்அணை கடந்த 12ம்தேதியும், கல்லணை 16ம் தேதியும் திறக்கப்பட்டு 25 நாட்களை கடந்த நிலையில் 5 நாட்கள் வீதம் முறைவைத்து கடைமடைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால்தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கல்லணையிலிருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டிணம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இரு பிரிவுகளாக வந்து சேர்கிறது. ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால்தான் கடைமடையை தண்ணீர் எட்டிப்பார்கும். முறைவைக்கப்படாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால்தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும். இது பற்றி கடைமடை விவசாயிகள் கூறும்போது தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தற்பொது போதுமான மழை இல்லதாததால் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியுள்ளது. விவசாயிகள் சாகுபடியைகூட கருத்தில் கொள்ளாமல் ஏரி,குளங்களை நிரப்ப மும்முரமாக இருந்து வருகிறோம். 500க்கும் மேற்பட்ட சிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் அணை திறந்து 25 நாட்களை கடந்த நிலையிலும் முறைவைத்து தண்ணீர் வழங்கப்படுவதால் தற்போதுதான் கடைமடையை எட்டி பார்த்துள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கடைமடை பகுதியில் தற்போதுவரை போதுமான மழை கிடையாது. ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை இன்னும் 30 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வேண்டும் கடைமடை விவசாயிகள் கூறுகின்றனர்….

The post கடைமடைக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Setubavasatram ,Thanjavur District ,
× RELATED தொழில் நஷ்டத்தை தவிர்க்க ஆழ்கடல்...