மாரி செல்வராஜ் கவிதையை வெளியிட்ட வடிவேலு

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அடிப்படையில்  ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் பெரும் வரவேற்பை பெற்றவை. தற்போது மாரிசெல்வராஜ் மூன்றாவது கவிதை தொகுப்பு ஒன்றை வெளியிடுகிறார். இதன் தலைப்பு “உச்சினியென்பது". இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வடிவேலு வெளியிட்டார்.  இந்த படத்தில் வடிவேலு உதயநிதி ஸ்டாலினின் தாய்மாமனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: