கோல்டன் விசா பெற்ற நாசர்

ஐக்கிய அரபு நாட்டின் அமீரகம் முன்னணி நடிகர், நடிகைகள் தொழில் அதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாவின் மூலம் 10 ஆண்டுகளுக்கு துபாயில் அந்த நாட்டின் குடிமகன் போன்று வாழலாம், தொழில் செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம்.  சமீபத்தில் துபாய் சென்ற நடிகர் நாசருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி உள்ளது. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடு செய்த தொழில் அதிபர் வசிம் அதானுக்குகும் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: