இனி புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: மன்னிப்பு கேட்ட அக்‌ஷய் குமார்

பாலிவுட்  நடிகர் அக்ஷய் குமார்  பான் மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. சிகரெட்டுக்கு எதிராக விழிப்புணர்வு படத்தில் நடித்த அக்‌ஷய்குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கலாமா? என்ற கேள்வி  எழுந்தது. இதனால் அந்த விளம்பரத்தில் நடித்தற்காக அக்‌ஷய் குமார் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினையும் கடந்த சில நாட்களாகவே என்னை வெகுவாக பாதித்துள்ளது.

இனி நான் புகையிலை விளம்பரங்களில் நடிக்க  மாட்டேன். உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து புகையிலை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக்கொள்கிறேன். முழு பணிவுடன் அந்த விளம்பரத்தில் இருந்து பின்வாங்குகிறேன். இந்த விளம்பரத்தில் நடித்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல காரணத்திற்காக பயன்படுத்தவும் முடிவெடுத்துள்ளேன். எதிர்காலத்தில் எனது விளம்பரத் தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன் என்றும் அதற்கு பதிலாக மக்களின் அன்பை கேட்பேன். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: