×

மகனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட பிறகு பல ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை. அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்க வந்தார். சகாப்தம் படத்தில் நடித்தார். மகனுடன் விஜயகாந்தும் நடித்தார், இதுதான் விஜயகாந்த் நடித்த கடைசி படம். தற்போது சண்முக பாண்டியன் மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உடல்நலமின்றி இருக்கும் விஜயகாந்த் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்முக பாண்டியனின் பிறந் நாளை விஜயகாந்த் உற்சாகமாக கொண்டாடி உள்ளார். அந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : Vijaykanth ,
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...