×

அருண்விஜய் மகனுடன் நடித்த ஓ மை டாக்: 21ம் தேதி வெளியாகிறது

2டி நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ள படம் ஓ மை டாக்.  இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வருகிற 21ம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
இதுகுறித்து அருண்விஜய் கூறியதாவது: ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான வேடிக்கையான தருணங்களை காண்பிக்கிறது இந்த படம்.

பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது. தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப்படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன். என்றார்.

Tags : Arunvijay ,
× RELATED அருண்விஜய் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!