×

கேஜிஎப் டப்பிங் படமல்ல: யஷ் சொல்கிறார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் கே ஜி எஃப் சாப்டர் 2 வருகிற 14ம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

படத்தினை தமிழில் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில்  நடைபெற்றது. விழாவில் யஷ் பேசியதாவது: சாதரணமாக இது ஒரு டப்பிங் படம் என்று சொல்வார்கள். ஆனால் கேஜிஎப்பைப் பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறோம். ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது அதற்குரிய மரியாதை தரவேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன். ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன். இவ்வாறு யஷ் பேசினார்.

Tags : Yash ,
× RELATED சட்டீஸ்கர் மதுபான ஊழல் அமலாக்கத்துறை...