×

ஒலிம்பிக்சில் 2 தங்கம் வென்ற ஹாக்கி வீரர் கேசவ் மரணம்

கொல்கத்தா: ஒலிம்பிக் ஹாக்கியில் 2 தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்காக விளையாடிய கேசவ்  சந்தர் தத்  முதுமை காரணமாக நேற்று கொல்கத்தாவில் காலமானார். இந்திய ஹாக்கி  நட்சத்திரம் கேசவ் சந்தர் தத் (95). லண்டனில் 1948ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியிலும்,  பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் 1952ல் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஜாம்பவான் தயான் சந்த் தலைமையிலான அணியிலும் கேசவ் விளையாடி இருக்கிறார். மோகன் பகான் ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த 10 ஆண்டுகளில்   6 முறை  லீக் கோப்பையையும், 3 முறை பெய்டன் கோப்பையும் வென்றுள்ளார்.  அந்த கிளப் சார்பில் வழங்கப்படும் ‘மோகன் பகான் ரத்னா’ விருதை வென்ற ஒரே  ஹாக்கி வீரர் கேசவ் மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும்  கால்பந்து வீரர்கள். ஓய்வுக்கு  பிறகு கொல்கத்தாவின் சந்தோஷ்பூரில் வசித்து வந்த கேசவ் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஹாக்கி இந்தியா, சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம்,  மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள், இந்நாள் ஹாக்கி வீரர்கள்  உட்பட பல்வேறு  தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்….

The post ஒலிம்பிக்சில் 2 தங்கம் வென்ற ஹாக்கி வீரர் கேசவ் மரணம் appeared first on Dinakaran.

Tags : Kesev ,Olympics ,Kolkata ,Keshav Chandar Dutt ,Olympic ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...