நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு

மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. நாக சைதன்யா நடிக்கிறார். இது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11வது திரைப்படம். நாக சைதன்யாவுக்கு 20வது படம்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா ஆகியோர், முறையே தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் அறிமுகமாகவுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த படக்குழு பற்றிய மற்ற விவரங்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories: