தெலுங்கு படத்திற்கு டப்பிங் பேசிய மைக் டைசன்

விஜய் தேவகொண்டா  நடித்து வரும் படம் லிகர். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படம் ஆகஸ்ட் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குத்துச் சண்டை உலக சேம்பியன் மைக் டைசன் நடித்துள்ளார்.

மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து  படமாக்கப்பட்டது. தற்போது அவர் படத்திற்கான டப்பிங்கை அமெரிக்காவில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவிலேயே பேசி உள்ளார். என் மீது அன்பு செலுத்திய உங்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். என்று மைக் டைசன் கூறியுள்ளார்.

Related Stories: