இனி ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன்: ரெஜினா

கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் ஆச்சார்யா. இப்படத்தில் காஜல் அகர்வால், ராம் சரண் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தபடத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் ரெஜினா. ஆனாலும் இனி ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: என்னை ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லி இதற்கு முன்பும் பல படங்களில் கேட்டார்கள். நல்ல சம்பளம் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. இந்த படத்தில் எனக்கு பிடித்த சிரஞ்சீவிகாருடன் ஆடினேன். ஆனால் இதுதான் எனது முதலும், கடைசியுமான ஒரு பாட்டுக்கு ஆட்டம். இனி ஆட மாட்டேன். என்கிறார்.

Related Stories: