×

பொதுமுடக்கத்தால் மலேசியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னார்வலர்கள் உதவி

கோலாலம்பூர்: கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானத்தை இழந்து உணவுக்கூட இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்ய மலேசியாவில் வெள்ளை கொடி இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மலேசியாவில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக கடந்த ஒருமாத காலமாக கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வெளியே வர அனுமதி இல்லை. இதனால் தொழில்கள் முடங்கி பொருளாதார இழப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை மலேசியாவில் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டில் மட்டும் மலேசியாவில் 468 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே பொருளாதார இழப்பால் இனி ஒருவர் கூட இறக்க கூடாது என்ற நோக்கில் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடங்கப்பட்டது தான் White Flag Movement. இதன்படி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுவோர் நிதி உதவி தேவைப்படுவோர் தங்கள் வீட்டின் முன்பு வெள்ளை கொடி ஏற்ற வேண்டும். வசதி படைத்தவர்களும் தன்னார்வலர்களும் இவர்கள் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள். இவ்வாறு பலர் உணவு மற்றும் நிதி உதவிகளை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் சிறிதளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் மலேசியா முழுவதும் பரவி இருக்கிறது. கொரோனா பதிப்பில் இருந்து மக்கள் தங்களை மீட்டெடுக்க தொடங்கியுள்ளனர்….

The post பொதுமுடக்கத்தால் மலேசியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னார்வலர்கள் உதவி appeared first on Dinakaran.

Tags : Kuala Lumpur ,Malaysia ,Corona ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...