எனக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், தப்பான படம் எடுக்க மாட்டேன்: வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் மன்மதலீலை. அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடல்ட் கண்டன்ட் படம் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் படம் குறித்து வெங்கட் பிரபு அளித்த பேட்டி வருமாறு: என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்றபோது இந்தக் கதை வந்தது, அருமையான கதை. மணிவண்ணன் பெரிய இடத்திற்கு செல்வார். அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார்.

என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் உதவியாளர்கள் மூன்று பேருடன் இப்படம் செய்துள்ளேன். யுவனின் உதவியாளர் தான் பிரேம்ஜி. இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். நன்றி. என்றார்.

Related Stories: