டாக்டர் ஆனார் வித்யா பிரதீப்

அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பிறகு  சைவம், தவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, பொன்மகள் வந்தாள், தலைவி, சித்திர செவ்வானம் படங்களில் நடித்தார். தற்போது வார்டு 126, யாதும் ஊரே யாவரும் கேளிர், அசுரகுலம், எண்ணித் துணிக, செகண்ட் ஷோ, பவுடர், கண்ணகி, செல்பி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

வித்யா ஸ்டெம் செல் உயிரியில் படித்து வந்தார். இந்த படிப்பில் ஆய்வு செய்து தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கரா நேத்ராலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இதற்கா நான் பெருமை படுகிறேன். தற்போது முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். சென்னைக்கு நான் வந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அடுத்து முதுகலை படிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்கிறேன்.

அறிவியலுக்கும் சமூகத்திற்கும் மிகுந்த நேர்மையுடன் எனது சிறந்த பங்களிப்பைத் தொடருவேன். எனது முனைவர் வழிகாட்டி மற்றும் வழிகாட்டியான டாக்டர் எஸ் கிருஷ்ணகுமார், இணை வழிகாட்டி பேராசிரியை உமா மகேஸ்வரி, முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர் சௌமியா மற்றும் டாக்டர் நிவேதிதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் நன்றி. என்று கூறியிருக்கிறார்.

Related Stories: