புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளில் வெளியாகிறது ஜேம்ஸ்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவர் கடைசியாக, ’ஜேம்ஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், சரத்குமார், ஆதித்யா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். புனித் ராஜ்குமாருக்கு, அவர் அண்ணன் சிவராஜ்குமார் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவரும் அவருடைய மற்றொரு சகோதரரான ராகவேந்திரா ராஜ்குமாரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் புனித் ராணு அதிகாரியாக நடித்திருக்கிறார். புனித் படத்திலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாரான படம். இந்த படம் புனித்தின் பிறந்த நாளான மார்ச் 17ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.  கர்நாடகாவில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் நான்காயிரம் காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன.

Related Stories: