×

ரத யாத்திரைக்கு அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை உலக அளவில் பிரபலமானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி ரத யாத்திரை நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் வருகிற 12ம் தேதி ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் பிற இடங்களில் உள்ள கோயில்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி என்வி. ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. …

The post ரத யாத்திரைக்கு அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ratha ,Supreme Court ,New Delhi ,Puri ,Jagannadar ,Temple ,Odisha ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...