×

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கூடலூர்: குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சேர்ந்தவர் ராபின், சுற்றுலா வாகன ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மகன் ரோஷன் மற்றும் 2 பேருடன் சரக்கு வாகனத்தில் உரம் ஏற்றிக்கொண்டு முல்லையார் தோட்டத்திற்கு சென்றார். குமுளி – கோட்டயம் மெயின் ரோட்டில் 65வது மைலில் இருந்து முல்லையார் தோட்டத்திற்கு செல்லும் வழியில், சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று நிற்பதை பார்த்துள்ளார். வாகன வெளிச்சத்தை கண்டவுடன் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. ராபின் திரும்ப வரும்போதும், மீண்டும் அதே இடத்தில் சிறுத்தை நின்றுள்ளது. இதை மகனின் உதவியுடன் செல்போனில் வீடியோ எடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் வனத்துறை நடத்திய ஆய்வில், பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் சிறுத்தை, ஏலத்தோட்டங்கள் வழியாக பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்ததிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி அமைக்க முடிவு செய்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். …

The post குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalore ,Kumuli ,Kerala State ,Ikkki District ,Dinakaran ,
× RELATED குமுளி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமைகள் உலா பொதுமக்கள் அச்சம்