×

ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை தடை செய்ய கோரி ஈரோடு எஸ்பியிடம் மனு அளிப்பு

ஈரோடு: குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு எஸ்பி சசி மோகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்து குறவன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். ரவுடி பேபி சூர்யா என்ற பெண், பொது சமூக வலைதளங்களில் எங்கள் ஜாதி பெயரை சொல்லி எங்களையும், எங்கள் இனத்தையும் அவமானம் செய்துள்ளார். இதனால் எங்கள் ஜாதி பெண், இளைஞர்கள், மக்கள் மீது தவறான பார்வையால் கேலிக்கு உள்ளாகி வருகிறோம். எனவே, சூர்யா ரவுடிபேபி22 என்ற யூடியூப் சேனலை தடை செய்து, ரவுடி பேபி சூர்யா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post ரவுடி பேபி சூர்யாவின் யூடியூப் சேனலை தடை செய்ய கோரி ஈரோடு எஸ்பியிடம் மனு அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode SP ,Rowdy Baby Surya ,YouTube ,Erode ,Kurinjir People's Federation ,Coordinator ,Chandrasekaran ,SP ,Shashi Mohan ,Dinakaran ,
× RELATED பெண்களின் ஆபாச வீடியோ பதிவேற்றிய யூடியூபர் கைது