மகளிர் தினம் கொண்டாடிய அஜித் மகள்

அஜித்துக்கு 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷாலினியை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு 2008ம் ஆண்டு மகள் பிறந்தார். அவருக்கு அனொஷ்கா என பெயரிட்டனர். அனொஷ்காவுக்கு இப்போது 14 வயது. அம்மா ஷாலினிக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார்.

சமீபத்தில் மகன் அத்விக்கின் பிறந்த நாளை அஜித் கொண்டாடினார். அந்த புகைப்படங்களில் அனொஷ்காவும் இருக்கிறார். அவரது வளர்ச்சியை பார்த்து சமூக வலைத்தளத்தில் பலரும் தலக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? என கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினத்தை ஷாலினி கொண்டாடினார்.

அப்போது, தனது தங்கையும் நடிகையுமான ஷாமிலி, மகள் அனொஷ்காவுடன் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்களில் ஷாலினி, ஷாமிலி உயரத்துக்கு இருக்கிறார் அனொஷ்கா. அம்மா, சித்தியை போல் அழகாக இருப்பதால் அனொஷ்காவும் நடிக்க வரலாம் என இப்போதே நெட்டிசன்கள் வரவேற்க தொடங்கிவிட்டுள்ளனர். ஆனால் அனொஷ்காவுக்கு சினிமா ஆசை கொஞ்சமும் கிடையாதாம்.

Related Stories: