×

கடல போடா ஒரு பொண்ணு வேணும்

ஆர்.ஜி.மீடியா  சார்பில் ராபின்சன்  தயாரித்துள்ள படம் " கடல போடா ஒரு பொண்ணு வேணும் " . இந்த படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் அசார் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மற்றும் செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இனியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் ஆனந்தராஜன் கூறியதாவது: காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,  காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.
வளர்ந்து வரும் இன்றய சூழலில் எல்லோரிடமும் செல் போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.  

தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். தான் காதலிச்சிதான் கல்யாணம் பண்ணனும் என்கிற  எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார். இவர் கடைசியாக ஒரு பெண்ணை பாலோ செய்து தன்னுடைய காதலை தெரிவிக்கின்றார். அவர் பதிலை  செல்போனில் தெரிவிப்பதாக கூற. சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார். இதிலிருந்து அவர்  மீண்டார் காதலி பதில்  என்ன ஆனது, இறுதியில்  தனது குடும்பத்தின் சாபத்தை நீக்கினாரா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.

Tags : Kadala Boda ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!