×

முதல்தர கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 1000

லண்டன்: முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1000 விக்கெட் மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் அணிக்காக களமிறங்கிய ஆண்டர்சன் (39 வயது), கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட் கைப்பற்றினார். அவர் 7 ஓவரில் 5 மெய்டன் உள்பட 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியபோது, முதல்தர கிரிக்கெட்டில் 1000 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டியதுடன், அதே வேகத்தில் மேலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.ஆண்டர்சனின் அசத்தலான பந்துவீச்சில் திணறிய கென்ட் அணி வெறும் 34 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது. அந்த இன்னிங்சில் கென்ட் 74 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 10 ஓவரில் 19 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 51வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை அரங்கேற்றினார்.  2002ம் ஆண்டு தனது 19 வயதில் லங்காஷயர் அணிக்காக அவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஆண்டர்சன் கடந்த ஆண்டு நிகழ்த்தியுள்ளார். …

The post முதல்தர கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 1000 appeared first on Dinakaran.

Tags : Anderson ,London ,England ,James Anderson ,England… ,Anderson 1000 ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை