பிரபாசுக்கு வில்லன் ஆகும் பிருத்விராஜ்

மலையாள நடிகர் பிருத்விராஜ் முன்னணி நாயகனாக இருந்தபோதும் ஏராளமான மலையாள படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் கனா கண்டேன் என்ற படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமானார். தற்போது பிருத்விராஜ் பிரபாசுக்கு வில்லனாக நடிக்கிறர். பிரபாஸ் நடித்து வரும் பான் இண்டியா படமான சலார் படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.முதல் பாகம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், சுருதிஹாசன், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: