அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தீயவர் குலைகள் நடுங்க

அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ்  நடிக்கும் படத்திற்கு  தீயவர் குலைகள் நடுங்க  என தலைப்பு வைத்துள்ளனர்.ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் அருள் குமார் தயாரிப்பில், தினேஷ்  இலெட்சுமணன்  இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரத் ஆசீவகன் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:

இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை,  கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்ணனியில் அழுத்தமான  க்ரைம் -த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த வித கதாப்பாத்திரம் தந்தாலும் தனது திறமையான நடிப்பின் மூலம் அசத்தும், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்  இந்த படத்தில் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜூன் இன்வெஸ்டிகேடிவ் ஆபிஸராக நடிக்கிறார். ரசிகர்களுக்கு புது அனுபவம் தரும் திரில்லர் அனுபவமாக உருவாகியுள்ளது.  என்றார்.

Related Stories: