×

கோவையில் பகுதிநேர விவசாயியாக மாறிய மருத்துவர்!: ஒரு ஏக்கரில் 2,500 அரியவகை மரங்களை வளர்த்து சாதனை..!!

கோவை: வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பார்கள். ஆனால் கோவையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மரங்களுக்கு இடையே தான் வீட்டையே கட்டியுள்ளார். தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் மரம், செடி கொடிகளை நட்டு ஒரு சோலையாகவே மாற்றியிருக்கிறார் டாக்டர் குருமூர்த்தி. பச்சை இலைகளுக்கு பின்னால் மறைந்திருந்து ஒளிப்படம் எடுக்கும் கதிரவன். தன்னை தான் என்ற எண்ணத்துடன் நிழலில் இளைப்பாறி அழகு காட்டும் சிறுபறவை. தூர பார்வையில் உயர்ந்து நிற்கும் மரங்களும், தோரணம் கட்டும் வண்ண மலர்களும் பலவகை காய், கனியாய் விரிந்து கிடக்கிறது அடர் வனம். ஏக்கர் நிலத்தில் எத்தனை மரங்கள், எத்தனை பழங்கள் என்று பட்டியலிடுகிறார் காரணகர்த்தா. சூலூரில் உள்ள இந்த ஒற்றை ஏக்கரில் மா, பலா, பப்பாளி, மாதுளையுடன் வெளிநாட்டு பழ வகைகள், காய்கறி செடிகள், 2,500 மரங்கள் என செறிந்திருக்கிறது இயற்கை. அல்ல அல்ல குறையாத களஞ்சியம் போல இங்கே அல்லி தான் கொடுக்கிறாள் பூமி தாய். மழைநீர் சேமிப்பு, சொட்டு நீர் பாசனம், கிராமத்து வீடு, தேன் கூடுகளின் அணிவகுப்பு, தேனீக்களின் வேலை பளுவை குறைக்க செயற்கை தேனடை, மீன் தொட்டி, மீன் கழிவுகள், மரக்கழிவுகளை எரித்த சாம்பல், நாட்டு மாடு சாணத்தில் இருந்து இயற்கை உரம் என்பவற்றுடன் மொட்டை மாடியில் மண் இல்லா விவசாயமும் இங்கே காண கிடைக்கிறது. வாழ்க்கையில் உயரம் காண வைத்த மண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த அடர்வனத்தை உருவாக்கியதாக கூறுகிறார் ராமநாதபுரத்தில் சிறுநீரகவியல் மருத்துவராக பணியாற்றும் குருமூர்த்தி. விவசாயம் லாபகரமானது என்பதை இளைய தலைமுறைக்கு இந்த அடர்வனம் உணர்த்தும் என்பது அவரது கருத்து. பச்சை காடு படர்ந்து கிடக்கும் இந்த நிலத்தில் மனித ஒலிப்புக்கு சாட்சியமாய் கோடுகளாய் பரவி உள்ளன. மண் கிடக்கும் நிலம், வியர்வை சிந்தினால் பொன் விளையும் பூமி ஆகும் என்பதற்கு இந்த அடர்வனமும் ஓர் உதாரணம்….

The post கோவையில் பகுதிநேர விவசாயியாக மாறிய மருத்துவர்!: ஒரு ஏக்கரில் 2,500 அரியவகை மரங்களை வளர்த்து சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Goa ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...