தமிழில் ஹீரோயின் ஆனார் அபர்ணா தாஸ்

மலையாள நடிகை அபர்ணா தாஸ் தமிழில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். லிப்ட் படத்தில் நடித்த கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை அம்பேத்குமார் தயாரிக்கிறார், ராஜேஷ் எம்.உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார். படம் குறித்து தயாரிப்பாளர் அம்பேத்குமார் கூறியதாவது:

இயக்குநர்  கணேஷ்  பாபு இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கூறியபோது, உடனடியாக என் மனதை வெகுவாக கவர்ந்தது. 2K கிட்ஸின்  ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக மேலும்  முக்கிய அம்சமாக இது  கேளிக்கையுடன் கூடிய திரைப்படமாக இருக்கும். அவர் இந்த காதல் கதையை மிக அழகான தருணங்களுடன்,  உணர்வுப்பூர்வமாக உருவாக்கியுள்ளார். கதையின் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படம் இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் என்ற  நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Related Stories: