×

கதிர் நடிக்கும் புதிய படம் இயல்வது கரவேல்

பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் கல்லூரி மாணவராக நடிக்கும் படம் இயல்வது கரவேல். சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது. அறிமுக இயக்குனர் எஸ். எல். எஸ். ஹென்றி எழுதி இயக்கும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல்சேட்டை அன்புதாசன், லகுபரன் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள் .ஜிப்ரான் இசைஅமைகிறார் .  ‘பரியேரும் பெருமாள்’ ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் .

Tags : Ray ,Karavel ,
× RELATED பாமக செயற்குழு கூட்டம்