5 வருடங்களுக்கு பிறகு ரிலீசாகிறது ஷாருக்கான் படம்

தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான். அவரது கடைசி படமான ஜீரோ கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் அவர் நடித்து வந்த பதான் படம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் மற்ற பணிகள் தொடங்கி இருக்கிறது.

இந்த படத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது  படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுதவிர அட்லி இயக்கும் படத்திலும், ராஜ்குமார் இரானி படத்திலும் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

Related Stories: