×

இந்தி படம் இயக்குகிறார் பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். சார்பட்டா பரம்பரைக்கு முன்பே அவர் இயக்குவதாக இருந்த படம் பிர்சா முண்டா. ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காக போராடியவரின் கதை. இதை பான் இண்டியா படமாக தயாரி்த்து இயக்க முடிவு செய்திருந்தார். அதற்குரிய பட்ஜெட் இல்லாததால் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். தற்போது இந்தப் படத்தை நமாஹ் பிக்சர்ஸ் சார்பில் ஷரீன் மன்த்ரி, கிஷோர் அரோரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள். ‘பிர்சா’ என்ற தலைப்பில் இந்தப் படம்  தயாராகிறது. இதில் நடிப்பவர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Tags : Pa. Ranjit ,
× RELATED எழுத்தாளர் ராஜ் கௌவுதமனுக்கு நீலம்...