×

சேலம் பொன்னம்மாப்பேட்டை, உடையாப்பட்டியில் 2 மளிகை கடைகளில் பயங்கர தீ விபத்து: ரூ10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்ைட, உடையாப்பட்டியில் அடுத்தடுத்து இரு மளிகை கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சேலம் சின்னதிருப்பதி அடுத்த சந்தோசம் நகரை சேர்ந்தவர் பெருமாள் (44). இவரது மனைவி கமலம். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். ெபருமாள் சேலம் பொன்னம்மாப்பேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும், அதனை ஒட்டிய இடத்தில் மாவு அரைக்கும் பிளவர் மில் வைத் துள்ளார். நேற்றிரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்றார். இதனிடையே இன்று காலை 5 மணியளவில் திடீரென மளிகை கடை தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், இதுகுறித்து பெருமாளுக்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத் திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாதபடி நடவடிக்கை மேற்கொண்டனர். அதேசமயம், மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ₹10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீசார், தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் உடையாப்பட்டி அடுத்த அதிகாரிப்பட்டியில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள், விரைவாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்….

The post சேலம் பொன்னம்மாப்பேட்டை, உடையாப்பட்டியில் 2 மளிகை கடைகளில் பயங்கர தீ விபத்து: ரூ10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Salem Ponnammappettai ,Odiyapatti ,Salem ,Ponnammappettai ,
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...