×

வாலிபர் அடித்துக் கொலை?

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தாமரைக்குளம் ஏரியை ஒட்டி அமைந்துள்ள சிவன் கோயிலின் பின்புறம் நேற்று 22 வயது மதிக்கத்தக்க கண்ணாடி அணிந்த வாலிபர், அம்மன் கோயில் புடவையில் அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அங்கு பணிபுரிபவரா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்….

The post வாலிபர் அடித்துக் கொலை? appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Shiva temple ,Thamaraikulam lake ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு