×

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளால் ராய்ட்டர் நிருபர் வியப்பு..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு குழுவின் கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளால் நிருபர்களும் வியப்பு அடைந்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் 16 நாட்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி வெளிநாடுகளில் இருந்து வரும் அணைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. 14 நாள் தனிமைப்படுத்தலை கருத்தில் கொண்டு முன்னதாகவே டோக்கியோ சென்ற சிங்கப்பூரை சேர்ந்த ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் ஒருவர், ஒலிம்பிக் அமைப்பு குழுவின் பாதுகாப்பு கெடுபிடிகளை கண்டு மிரண்டுபோனார். நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரை வி.வி.ஐ.பி போல 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமுக்கு காரில் அழைத்து சென்றனர். முன்னதாக விமான நிலையத்திலேயே அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தலின் போதும் கொரோனா பரிசோதனைகள் உண்டு. அதிலும் நெகட்டிவ் முடிவு கிடைத்தாலும் அடுத்த 11 நாட்களுக்கு செய்தி சேகரிக்க அவர் எங்கும் வெளியே செல்ல முடியாது. தனது அறையில் இருந்து அருகில் இருந்த பத்திரிக்கையாளர் மையத்திற்கு மட்டுமே அவர் செல்ல முடியும். இந்த 11 நாட்களும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அதன்பின்னரே பல்வேறு இடங்களுக்கு போட்டிகள் குறித்த செய்திகள் சேகரிக்க ஒரு நிருபர் செல்ல முடியும். மொத்தத்தில் இது வித்யாசமான அனுபவம் என்று ராய்ட்டர் நிருபர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். …

The post ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பாதுகாப்பு கெடுபிடிகளால் ராய்ட்டர் நிருபர் வியப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Reuters ,Tokyo ,Japan ,Tokyo Olympic Organizing Committee ,Tokyo Olympics ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!